Thursday, November 17

பழைய நோட்டுகள் ரூ. 2,000 வரை மட்டுமே மாற்ற முடியும்

வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500 லிருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.இது தொடர்பாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது: 
*நாளை முதல் வங்கி கவுண்டரில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500லிருந்து ரூ. 2ஆயிரமாக குறைப்பு.
*வங்கியில் பணம் மாற்றுவதற்கு நீண்ட வரிசையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*விவசாயிகள் ஒரு வாரத்தில் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கலாம்.
*பதிவு செய்த வர்த்தகர்கள் வாரம் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.
*திருமணம் நடத்தும் மணமகன் அல்லது மணமகளின் தந்தை அல்லது தாய், தங்களது வங்கிக்கணக்கில் ரூ.2.5 லட்சம் எடுக்கலாம்.


*திருமணத்திற்கு பணம் எடுக்க உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
*விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்த 15 நாள் கூடுதல் அவகாசம்.
*விளை பொருட்கள் விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.
*வேளாண் சந்தை கமிட்டியில் பதிவு செய்தவர்கள் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.
*பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
*மக்களுக்கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
*ஏ.டி.எம்.,களை மாற்றியமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.
*மத்திய அரசின் குரூப் சி ஊழியர்கள் சம்பள முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் மாத சம்பளத்தில் இதை சரிசெய்யலாம்.
*ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவது தொடர்பாக சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசிடம் தேவையான பணம் உள்ளது. மக்கள் பீதியடைய தேவையில்லை எனக்கூறினார். 
Auto Scroll Stop Scroll