Thursday, November 3

பிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தங்களது தேர்வு முடிவினை காலை 10 மணி முதல் இணையதளத்திலிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (நவ.3) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in  என்ற இணைதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேற்கண்ட இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன்  Provisional Mark Sheet HSE Result- September 2016 என்ற Screen தோன்றும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி ஆகிய விவரங்களை தட்டச்சு செய்ய வேண்டும். மேலும் Screenஇல் தோன்றும் குறியீட்டினை (Code) அதில் உள்ளது போலவே Type செய்ய வேண்டும். 

அதன் பின்னர் View Result என்ற Option-ஐ Click செய்ய வேண்டும். அப்போது தேர்வர்களது பதிவெண் பெயரில் ஒரு pdf file பதிவிறக்கம் ஆகும். அந்தக் கோப்பில் தேர்வருக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இருக்கும். அதை தேர்வர்கள் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

விடைத்தாள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: செடம்பர் 2016 தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) பிற்பகல் 3 மணி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நேரில் சென்று உரிய கட்டணத்தை பணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். 
விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம்: பகுதி-1 மொழி - ரூ.550 (இரு தாள்களுக்கு)
பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550 (இரு தாள்களுக்கு)
பிற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275
மறுகூட்டல் கட்டணம்: 
பகுதி-1 மொழி, பகுதி 2 மொழி (ஆங்கிலம்), உயிரியல் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.302 (இருதாள் பாடங்கள்) பிற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205
Auto Scroll Stop Scroll