Friday, October 14

அலங்கோல மாணவர்களுக்கு ஆசிரியர் செய்த 'ஹேர் கட்டிங்'!!!

'லேட்டஸ்ட் ஸ்டைல்' என்ற பெயரில், அலங்கோலமாக சிகை அலங்காரம் செய்து வந்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் செலவில், முடி திருத்தம் செய்யப்பட்டது.சென்னை, தாம்பரம் அருகே உள்ள, மணிமங்கலம் அரசு பள்ளியில் படிக்கும், ஆறு மாணவர்கள், வித்தியாசமான சிகை அலங்காரம் செய்திருந்தனர். லேட்டஸ்ட் ஸ்டைல் என்ற பெயரில், உச்சந்தலையில் குடுமி போன்றும், குருவிக்கூடு போன்றும் முடியை அலங்கரித்திருந்தனர்.
இதை பார்த்ததும், சக மாணவ, மாணவியர் சிரித்தனர்; ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்; அவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, முடி திருத்துவோரை அழைத்து வந்தனர்; ஆசிரியர்கள் செலவில், பள்ளியிலேயே அந்த மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின், 'ஸ்டைல்' என்ற பெயரில், அலங்கோலமாக முடி வெட்ட, அனைத்து மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. 
Auto Scroll Stop Scroll