Friday, October 28

மின்வாரிய நேர்காணல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் மாற்றிவைக்கப்பட்டுள்ளது.வாரியத்தில் காலியாக உள்ள 750 பணியிடங்களுக்கு ஜூன் 19, 28 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்று, முடிவுகள் அக்டோபர் 19-இல் வெளியிடப்பட்டன.


இவற்றில் 25 சுருக்கெழுத்து, தட்டச்சர், 25 இளநிலை தணிக்கையாளர், 50 உதவி வரைவாளர் பணிகளுக்கான நேர்காணல் நவம்பர் 2,4,5,7 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேர்காணல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


3 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதனால் 100 மின்வாரியப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேர்காணல் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தேதி, இடம் நவம்பர் 19-ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும். நேர்காணலில் பங்கேற்பவர்கள் ஏற்கெனவே இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்பு கடிதம், சரிபார்க்கும் பட்டியலையே நேர்முகத் தேர்வின்போது எடுத்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll