Thursday, September 8

ஓணம் பண்டிகை : சென்னைக்கு விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும், 14ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு, அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்படுகிறது; அதை முன்னிட்டு, அரசின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில், அக்டோபர், 8ம் தேதி சனிக்கிழமை, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 14ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், பொது மக்களுக்கு வசதியாக கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும், குறைந்த பணியாளர்களை கொண்டு இயக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Auto Scroll Stop Scroll