Thursday, September 22

வனத்துறை பணி மீண்டும் வாய்ப்பு

வனத்துறையில், காலி பணி இடங்களை நிரப்ப நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றும், நேர்காணலுக்கு அழைக்கப்படாதோருக்கு, வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வனத்துறையில், வனவர், கள உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில், வெற்றி பெற்றோருக்கான, அசல் சான்று சரிபார்ப்புப் பணி, சென்னையில், ஆக., மாதம் நடந்தது. தற்போது, இரண்டாவது பட்டியல், www.forests.tn.nic.in என்ற வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது; அஞ்சல் வழியிலும் தகவல் அனுப்பப்படுகிறது.

பட்டியலில் உள்ளோர் கல்வி, ஜாதி மற்றும் மாற்று சான்றிதழ்களின் நகல்கள், தேர்வு பதிவெண் எழுதப்பட்ட சுய முகவரி உறை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட, எழுத்துத்தேர்வு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை, வரும், 30ம் தேதிக்குள், உறுப்பினர் - செயலருக்கு அனுப்ப வேண்டும்.
Auto Scroll Stop Scroll