உயர் கல்வி நிறுவனங்களுக்கான, தேசிய தரவரிசை பட்டியலுக்கு விண்ணப்பிக்க, 30ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை, அமெரிக்காவை சேர்ந்த, 'குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் ஆய்வு செய்கிறது; அதன்படி, சர்வதேச தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் பின்தங்கின; பல பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, பட்டியலில் இடமே கிடைக்கவில்லை.
அதையடுத்து, மத்திய அரசின் சார்பில், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை அமைப்பு உருவாக்கப்பட்டது; கடந்த ஏப்ரலில், முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை, அமெரிக்காவை சேர்ந்த, 'குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் ஆய்வு செய்கிறது; அதன்படி, சர்வதேச தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் பின்தங்கின; பல பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, பட்டியலில் இடமே கிடைக்கவில்லை.
முதல் பட்டியலில், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை ஆகியவை இடம் பெறவில்லை. மேலும், மதுரை, வேலுார், திருநெல்வேலி, திருச்சி பல்கலைகளுக்கும் இடம் இல்லை.
இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., மற்றும் தேசிய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், விளக்கம் கேட்கப்பட்டது.இந்நிலையில், 2017 ஏப்ரலில் வெளியாகும் தரவரிசை பட்டியலுக்கு, செப்., 1 முதல், 'ஆன்லைன்' விண்ணப்பம் துவங்கியது; செப்., 30க்குள், கல்வி நிறுவனங்கள், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், பல கல்வி நிறுவனங்கள், இன்னும் பதிவு செய்யவில்லை. உடனடியாக பதிவு செய்ய, மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.அடுத்த ஆண்டிலாவது, தமிழக பல்கலைகள், தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெறுமா என, கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.