Sunday, September 25

இரண்டாம் பருவ புத்தகம் எப்போது?

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததும், அக்., 3 முதல், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும் நடக்கிறது. வரும், 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து,
விடுமுறை விடப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும், விடுமுறைக்கு பின், பள்ளி திறக்கும் நாளான, அக்., 3ல், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு
உள்ளனர். 
Auto Scroll Stop Scroll