Thursday, September 22

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்: சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் ஆகிய இருபாலரும் வரும் 23 -ஆம் தேதிக்குள்  www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இதைத்தொடர்ந்து, இந்தப் பயிற்சிகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி, வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.


இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444902522, 9841112566, 9514856899, 9443278915 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Auto Scroll Stop Scroll