Thursday, September 22

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு தலைவர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் நிதி நிலைமை சீரமைத்த பிறகு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை சிறப்பு அறிவிப்பு மூலம், பட்ஜெட் கூட்டம் முடிவதற்குள் சட்டசபையில் அறிவிக்க வேண்டும் என, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற முதல்வர் நாராயணசாமி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் செப்., மாதத்தில் பதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதற்காக, கூட்டமைப்பு சார்பில், கவர்னர் மற்றும் முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll