Thursday, September 1

ஆதிதிராவிட பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அறிவித்தார்.

சட்டசபையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின டிரைவர்கள், சுய வேலைவாய்ப்பு பெற, 960 டிரைவர்களுக்கு, கனரக வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, தாட்கோ சிறப்பு மைய திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச, எழுத, 11 மாத பயிற்சி அளிக்கப்படும்; இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய சிறப்பு திட்ட நிதியில் இருந்து, 34 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
Auto Scroll Stop Scroll