Wednesday, August 10

தட்டச்சர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தட்டச்சர் பணிக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டள்ள செய்திக்குறிப்பு: குரூப் - 4 பதவியில் தட்டச்சர் பணிக்கு, 2014 டிச., 12ல் எழுத்துத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், 2015 மே, 22ல் வெளியாகின. இதில் தேர்வானவர்களுக்கு, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், 314
காலியிடங்களுக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வாணைய அலுவலகத்தில், ஆக., 16 முதல், 19 வரை நடக்கும். இதற்கான தகவல்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், இணையதளத்திலும் பதிவெண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு, குறித்த நேரத்தில் வர தவறினால், அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Auto Scroll Stop Scroll