Wednesday, August 17

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவப் பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை படிக்க முடியும்.

2016 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 1, ஜூலை 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் 11 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள்வெ ளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளின் படி 4,09,477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.cbseresults.nic.in, www.results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
Auto Scroll Stop Scroll