Friday, August 19

முதல்வர் கோப்பைக்கான மாநில கபடி போட்டி தேனியில் துவங்கியது

தேனியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான இருபாலருக்கான மாநில மின்னொளி கபடி போட்டிகள் நேற்று துவங்கின.தேனி அருகே பழனிசெட்டிபட்டி மைதானத்தில் கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். 'நாக் அவுட்' முறையில் நடக்கும் போட்டிகளில் சென்னை, கடலுார், திருச்சி, கோவை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த வீரர்,
வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் ஆண்கள் பிரிவில் 8, பெண்கள் பிரிவில் 8 அணிகள் மோதுகின்றன.
ஆண்களுக்கான துவக்க போட்டியில் தஞ்சை அணியும், கோவை அணியும் மோதின. இதில் 33:13 என்ற புள்ளி கணக்கில் தஞ்சை அணி வென்றது. பெண்களுக்கான துவக்க போட்டியில் தஞ்சை , மதுரை அணிகள் மோதின. இதில் 34:24 என்ற புள்ளி கணக்கில் தஞ்சை அணி வென்றது. இன்று அரையிறுதி, நாளை (ஆக., 20) இறுதி போட்டிகள் நடக்கின்றன. அதனைத்தொடர்ந்து பரிசளிக்கப்படுகிறது.
ரூ. 12 லட்சம் முதல் பரிசு
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பரிசாக தலா ரூ. 12 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 9 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 6 லட்சம் அணிகளுக்கு வழங்கப்படவுள்ளது.போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் ராஜேந்திரன் (தேனி), புன்னியமூர்த்தி (திருச்சி), கபடி பயிற்சியாளர் ரமேஷ் செய்துள்ளனர்.
Auto Scroll Stop Scroll