Wednesday, August 3

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 2016-17-ஆம் ஆண்டுக்கான அரசு கல்வி உதவித் தொகை பெறுவதற்கும், ஏற்கனவே உதவித் தொகை பெற்றவர்கள் புதுப்பித்தலுக்கும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும். முதல் வகுப்பு நீங்கலாக, 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் முந்தைய ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் 50 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் உரிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரிபார்த்து, ஆக.31-ஆம் தேதிக்குள் w‌w‌w.‌sc‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n என்ற இணைய தள முகவரியில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், தகுதியுள்ள மாணவ, மாணவிகளின்
பெயர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll