Friday, August 19

உலக கேரம் போட்டியில் வத்தலக்குண்டு மாணவி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி 9ம் வகுப்பு மாணவி சத்யா, 15, உலக கேரம் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் மார்ச் 3ல் கன்னியாகுமரியில் நடந்த மாநில இளையோர் கேரம் போட்டியில் 3ம் இடம் பிடித்தார்.
இவரது சாதனைகளுக்கு பரிசாக, மாலத்தீவில் 16 நாடுகள் பங்கேற்கும் உலக போட்டியில் பங்கேற்கிறார். வழியனுப்பு விழாவில் தாளாளர் சேவியர் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
Auto Scroll Stop Scroll