Wednesday, August 24

பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு தேசிய கீதம்

நாட்டின், 70வது சுதந்திர தினத்தின், இரு வார கொண்டாட்டம் நேற்று நிறைவு பெற்றது. இதற்காக, அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பு தேசிய கீதம் பாடப்பட்டது.நாட்டின், 70வது சுதந்திர தினம், ஆக., 15ல் கொண்டாடப்பட்டது. மத்திய அரசு உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களில், இந்த விழா, ஆக., 9ல் துவங்கி, இரு வார விழாவாக கொண்டாடப்பட்டது.
நேற்று விழா நிறைவை குறிப்பிடும் வகையில், காலை, 11:00 மணிக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றாக கூடி, சிறப்பு தேசிய கீதம் பாடினர். பல இடங்களில் மைதானத்தில் ஒன்றாக கூடியும், சில இடங்களில், வகுப்பறையில் நின்றபடியும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
Auto Scroll Stop Scroll