Thursday, July 28

முதல் ஆண்டு நினைவு தினம் : அப்துல் கலாம் சிலை திறப்பு

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில், அவரது வெண்கல சிலையை திறந்து வைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் புகழாரம் சூட்டினர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2015 ஜூலை 27ல், மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, திடீர் மாரடைப்பில் உயிரிழந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே, பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதல் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகள், நேற்று, அவரது நினைவிடத்தில் நடந்தன. காலை, 8:45 மணிக்கு, மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பரீக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராமராவ் பொம்ரே, தமி-ழக அமைச்சர்கள் நிலோபர் கபில், மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி., பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
கலாமின், 7 அடி உயர வெண்கல சிலையை அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மணிகண்டன் திறந்து வைத்தனர். பின், கலாம் நினைவிடம், கண்காட்சியக அடிக்கல் கல்வெட்டை அமைச்-சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பரீக்கர் திறந்து வைத்-தனர். தற்-கா-லிக கண்காட்சி அரங்கும் திறக்-கப்-பட்-ட-து. தொடர்ந்து நடந்த நினைவு தின நிகழ்ச்சியில், கலாமுக்கு, அமைச்சர்கள் புகழாரம் சூட்டினர்.
Auto Scroll Stop Scroll