Wednesday, July 27

பி.ஆர்க்., கவுன்சிலிங் 631 இடங்கள் காலி

சென்னை அண்ணா பல்கலை நடத்திய பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், 631 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 41 'ஆர்கிடெக்ட்' கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக, எட்டு கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்த, 49 கல்லுாரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அண்ணா பல்கலையில், நேற்று கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
மொத்தம், 49 கல்லுாரிகளில் உள்ள, 1,868 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில், 1,237 இடங்கள் நிரம்பி, 631 இடங்கள் காலியாக இருந்தன.
Auto Scroll Stop Scroll