Wednesday, July 27

பேச்சு தோல்வி: ஜூலை 29-இல் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள்
சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது, வாராக் கடணை வசூலிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
புது தில்லியில் தொழிலாளர் நலத் துறை தலைமை ஆணையர் ஏ.கே.நாயக் தலைமையில்,வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சமரச முடிவு
ஏற்படாததால், திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் நாடு முழுவதும் 9 வங்கி ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார். எனினும் ஐந்தாவது சனிக்கிழமை என்பதால், அனைத்து வங்கிகளும் வரும் சனிக்கிழமை (ஜூலை 30) செயல்படும்.
Auto Scroll Stop Scroll