துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர் மற்றும் மாவட்ட பதிவாளர் போன்ற பதவிகளில், 74 பணியிடங்களுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 2015 ஜூலையில் தேர்வு அறிவித்தது.
நவம்பரில் நடந்த முதல் நிலைத் தேர்வில், 1.17 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவு, 2016 ஏப்ரலில் வெளியானது. இதில், 4,033 பேர், முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். முதன்மை தேர்வு, நாளை முதல் சென்னையில், மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், தேர்ச்சி பெறுவோரிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும்.