Wednesday, September 26

2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்

புதிய பாடத் திட்டத்தில் தயாரான, இரண்டாம் பருவ புத்தகங்களை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. காலாண்டு தேர்வு வரை, முதல் பருவம்; அரையாண்டு தேர்வு வரை, இரண்டாம் பருவம்; ஆண்டு இறுதி தேர்வுக்கு, மூன்றாம் பருவம் என, மூன்று புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 

காரைக்குடி 'சிக்ரி'யில் 'கிரீன் பட்டாசு' : ஒலி, புகை மாசு குறைவு

காரைக்குடியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி'யில் விஞ்ஞானி சுப்ரதா குண்டு தலைமையிலான குழுவினர் புகைமாசை கட்டுப்படுத்தும் பசுமை பட்டாசை உருவாக்கியுள்ளனர்.

350 வீடியோ பாடங்கள்: மாணவர்களுக்கென வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 மாண வர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசின் சார்பில், 350, 'வீடியோ' பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக, செங்கோட்டையன், செயலராக, உதயசந்திரன், முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் ஆகியோர் பதவியேற்ற பின், இத்துறையில், புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. செயலர், உதயசந்திரன், சமீபத்தில், வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.

2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்கப்படுகிறதா? அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகம் குறித்தும், புத்தக சுமை குறித்தும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

Tuesday, September 25

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைக்க முடிவு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சியை தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அளித்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, நிதியை எவ்வாறு பயன்படுத்துவது, மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள் கல்வி அறிவை அதிகரிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Monday, September 24

UPSC Announces Civil Services Exam 2019 Date


UPSC Calendar 2019: Check Here

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

2011, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 82 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது.
அதில் வெற்றிபெறும் ஆசிரியர்களை கொண்டு காலிப்பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படும்.

இணைய ஆபத்தை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவும் புதிய, 'ஆப்'

'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட இணைய விளையாட்டுகளால் எழும் ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், புதிய விளையாட்டு, 'ஆப்'பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் தர வேண்டும்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

'பகுதி நேர, பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,700க்கும் மேற்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து, பாடங்கள் நடத்தப்படுகின்றன.பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பாட அடிப்படையில், மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

Sunday, September 23

இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம்

இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர்சிறப்பு முகாம் நடக்க உள்ளது.செப்., 1ல், சட்டசபை தொகுதி வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பட்டியலில், பெயர் இல்லாவிட்டால், புதிதாக விண்ணப்பிக்கலாம். 

தேர்வுத்துறை இயக்குனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், 2005-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 998 மதிப்பெண்கள் எடுத்தார். பின்னர், வீரச்சிபாளையத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்தார். முதலாம் ஆண்டு படிப்பை முடித்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்பின்போது ராஜேஸ்வரியின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் பாடவாரியாக உள்ள மதிப்பெண்களுக்கும், மொத்த மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் உள்ளது தெரிந்தது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை காணோம்!

தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும் ஆக.,7ல் தரம் உயர்த்தப்பட்டன. மேல்நிலையில் தலா ஆறு வீதம் 600, உயர்நிலையில் தலா ஐந்து வீதம் 500 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.

Saturday, September 22

Revision of Interest Rates for Small Savings Schemes ( for 3rd quarters ie. 01/10/2018 to 31/12/2018 )

கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் , ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்!!!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதே இதற்கு காரணம் என்றும், அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மாவட்டங்களில் தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு

பொதுத்தேர்வு ஏற்பாடு பணிச்சுமையை குறைக்க, மாவட்டங்களில், தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுகளை நடத்த வசதியாக, தமிழகத்தின், 32 மாவட்டங்கள், ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வு, பல்வேறு தொழில்நுட்ப தேர்வுகள் உள்ளிட்ட, 22 வகையான தேர்வுகளை நடத்துகிறது.

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டம் ?

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்குகுறைந்த பட்சம், 30 மாணவர்கள் என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. 

மாணவர்களுக்கு 'ஹெல்த் கார்டு' திட்டம்

மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், 'ஹெல்த் கார்டுகள்' வழங்கப்படுகின்றன.இந்த திட்டத்தில், பள்ளிகளில், டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். பரிசோதனை விபரத்தை பராமரிக்கும் நோக்கில், மாணவ - மாணவியருக்கு, 'ஹெல்த் கார்டு' வழங்கப்படுகிறது. 

பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்க உத்தரவு

பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களே, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்த சான்றிதழில் உள்ள, பிறந்த தேதி அதிகாரபூர்வமானதாக கருதப்படுகிறது. எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ்களில், பிறந்த தேதி தவறாக உள்ளவர்கள், திருத்தம் கேட்டு, தேர்வுத்துறைக்குவிண்ணப்பிக்கின்றனர்.

Friday, September 21

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு

கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

நவ.27 முதல் வேலை நிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சிவகங்கை, 'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27 முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக,' ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.மாவட்ட உயர்மட்டக் கூட்டம் சிவகங்கையில் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் தலைமையில் நடந்தது. மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர் பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:

3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து

தமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு நிதி அளிக்கிறது.தமிழகத்திலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதிகளுக்கு, நிதி உதவி அளிக்கப்படுகிறது.

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நாளை நிறைவு

தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு நாளை முடிகிறது. மீண்டும் அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 1 முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து வருகிறது. 

Thursday, September 20

'ராகிங்' தடுப்புக்கு 'மொபைல் ஆப்' அண்ணா பல்கலை உருவாக்கம்

அண்ணா பல்கலை சார்பில், ராகிங் தடுப்புக்கென, தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை, அனைத்து பல்கலைகளிலும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் மேலாண்மை அமைப்பு என்ற பெயரில், அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் பிரிவு சார்பில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அலைபேசியில் உள்ள, 'ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்' பகுதியில், 'எஸ்.சி.எம்.எஸ்., அண்ணா பல்கலை' என்ற பெயரில் உள்ள இதை, பதிவிறக்கம் செய்யலாம்.

ஜாக்டோ - ஜியோ 'ஸ்டிரைக்' அறிவிப்பு

''நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தியாகராஜன் கூறினார்.தலைமை செயலகத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பல கட்ட போராட்டம் நடத்தியும், எங்களின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே, நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

காலாண்டு விடுமுறையில் 'நீட்' பயிற்சி வகுப்பு

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். 
Auto Scroll Stop Scroll